உள் நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்து பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவிதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாகவுள்ளதாலேயே நிதியுதவி நிறுத்தப்பட்டதாகக் கொழும்பில் உள்ள ஐ.நா.சபையின் அகதிக ளுக்கான தூதுவராலயப் பேச்சாளர் சொலக் கனி பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாகவே மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியு தவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இம் மக்களில் இதுவரை உதவித் தொகை வழங்கப்படாமல் இருந்த குடும்பங் களுக்கு மார்ச் மாதம் இறுதி வரையில் 3மில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவைப்படுகின்றது.
இந்த நிதியுதவியைப் பெறுவதற்கான முன் முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். 2010 ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மக்களுக்கு வழங்குவதற்குத் தேவைப்படுகின்றது.
எதிர்வரும் மாதங்களில் இந்த நிதியுதவி எமக்குக் கிடைக்காத பட்சத்தில் மீளக்குடியமர் வதற்காக இடைத்தங்கல் முகாம்களில், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காமல் போகும் சந்தர்ப்பம் உண்டு.
இதேவேளை ஐ.நாவின் தூதரகத்தினால் வழங்கப்படும் உடுபுடைவைகள், பாய்கள், நுளம்பு வலைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் காடுகளைச் சுத்தம் செய்வதற்கு வழங்கப்படும் உபகரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணி தொடர்ந்தும் மேற் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக