கடந்த மாதம் 29ம் திகதி அவர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் தனது இந்த பயணம் குறித்தம் அங்கு தான் மேற்கொண்ட அவதானிப்புகள் குறித்தும் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அரசாங்க தரப்பு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அங்கு தான் கண்ட போரின் கொடூரங்களும் அழிவுகளும் எமது மக்களின் எதிகாகாலம் குறித்த நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆயர் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு எல்லாமே அழிவடைந்து போயுள்ளதாகவும் காணும் இடங்கள் எல்லாம் போரின் கோர முகத்தை காண்பித்து நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வன்னியின் மேலும் சில பகுதிகளுக்கும் ஆயர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் பற்றை காடுகளாகி காட்சி தருவதாகவும் வீடுகள் எல்லாம் அழிவடைந்து வெறும் இடிபாடுகள் மட்டுமே மிச்சமிருப்பதாகவும் மக்களின் கால்நடைகள் அனைத்தம் தொலைந்து போயுள்ளதாகவும் ஆயர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக