ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட அந்தமான் தீவுகளை ஸ்ரீலங்கா உரிமை கோர தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே ரோஹித்த போகொல்லாகம இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்காவின் கடல்படுகை உரிமைகள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோஹித போகொல்லாகம இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை இதனை 2025 ஆம் ஆண்டளவில் கவனத்தில் எடுக்கும் என்றும் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோஹத்த போகொல்லாகம வெளியிட்டுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக