வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரார்களின் பந்து வீச்சும் களத்தடுப்பும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்தியதுடன் விரைவாக ஆட்டமிழக்கவும் செய்துள்ளன.
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் ஹரிவதனன் 148 பந்துகளில் 14 பவுண்ட்ரி ஒரு சிக்ஸருடன் 85 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையாலும் இறுதி 5 விக்கெட்டுக்கள் 12 ஓட்டங்களில் இழக்கப்பட்டமையாலும் குறைந்த ஓட்டங்களுடன் சென். ஜோன்ஸ் கல்லூரியை ஆட்டமிழக்கச் செய்தது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை பகல் 10.00 மணியளவில் 104ஆவது போட்டி ஆரம்பமானது. முதல் நாள் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி 57.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாளர்களாக களமிறங்கிய ஜெயந்தன் அட்ரின் 2.3 ஓவர்களில் இணைப்பாட்டமாக 04 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், யாழ். மத்திய கல்லூரியின் ஆரம்ப பந்து வீச்சாளர் வதுசனன் வீசிய 08 பந்துகளில் 02 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அட்ரினுடன் கஜிவன் இணைந்தார். இவர் 04..2 ஓவர்களில் 06 பந்துகளைச் சந்தித்து ஆறு ஓட்டங்களைப் பெற்ற இருந்து வேளை, ஜெரிக்துசாந் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 08 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட் சரிந்தது.
இரண்டாவதாக களமிறங்கிய ஹரிவதனன் அட்ரினுடன் இணைந்து, அவதானமாகத் துடுப்பெடுத்து ஆடிய போதிலும், அட்ரின் 12.4 ஓவரில் 47 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற்று, வதுசனன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 35 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் மூன்றாவது விக்கெட்டும் இழக்கப்பட்டது.
அடுத்து யோகேஸ்வரன் - ஹரிவதனன் இணைந்தனர். யோகேஸ்வரன் 25.2 ஓவரில் 35 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 33 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த போது நான்காவது விக்கெட்டையும் இழக்கும்நிலை
நான்காவதாக விதுசன்-ஹரிவதனன் களமிறங்கினர். விதுசன் 38.4 ஓவரில் 33 பந்துகளில் 05ஓட்டங்களை பெற்று, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஹரிவதனன் 54 ஓட்டங்களை பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் காணப்பட்டார்
ஐந்தாவதாகக் களமிறங்கிய பிரணவன்-ஹரிவதனன் இருவரும் கவனமாகத் துடுப்பெடுத்தாடினர். எனினும் பிரணவன் 51.5 ஓவரில் 35 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஓட்டங்களின் எண்ணிக்கை 153 ஆனது.
ஆறாவதாக களமிறங்கிய மதுசன்-ஹரிவதனன் இணைப்பாட்டத்தில், மதுசன் 55.3 ஓவரில் 15 பந்துகளில் ஓட்டம் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 162 காணப்பட்டது. ஹரிவதனன் 84 ஓட்டங்களைப் பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் இருந்தார்.
ஏழாவதாக பிரியதர்சன்-ஹரிவதனன் இணைந்து களமிறங்கினர். பிரியதர்சன் 56.2 ஓவரில் 05 பந்துகளில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 01 ஓட்டம் மட்டுமே பெறப்பட்டது.
எட்டாவதாகக் களமிறங்கிய டக்சன்-ஹரிவதனன் இணைந்து துடுப்பெடுத்தாடினர். ஹரிவதனன் 56.4 ஓவரில் 148 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 164.
ஒன்பதாவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜெருசன்-டக்சன் இணைந்தனர். ஜெருசன் 57.3 ஓவரில் 02 பந்துகளில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.
டக்சன் ஆட்டமிழக்காது ஒரு பந்தை சந்தித்து ஒரு ஓட்டத்துடன் களத்தில் இருந்தார்.
பலத்த எதிர்பார்ப்புடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். மத்திய கல்லூரி முதல் நாள் ஆட்ட முடிவில் 34 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காணப்பட்டது
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வதுசனன்-திவாகர் களமிறங்கினர். 2. 5 ஓவரில் 08 பந்துகளை சந்தித்து 01 ஒட்டத்தைப் பெற்றிருந்த வேளை, வதுசனன் ஆட்டமிழந்தார்.
முதலாவதாகக் களமிறங்கிய எட்வேட் எடின், திவாகருடன் இணைந்து துடுப்பெடுத்தாடினார். எட்வேட் எடின் 10 ஓவர்கள் நிறைவில் 18 பந்துகளில் 03 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 26 ஆகக் காணப்பட்டது.
இரண்டாவதாகக் கோகுலன் திவாகருடன் இணைந்து ஆடினார். கோகுலன் 11 .5 ஓவரில் 06 பந்துகளைச் சந்தித்து ஒரு ஓட்டத்தைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 28 ஆனது.
மூன்றாவதாக களமிறங்கிய ஜெரிக் துசாந் திவாகருடன் இணைந்தார். திவாகர் 17.4 ஓவரில் 54 பந்துகளைச் சந்தித்து 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 53 ஆகக் காணப்பட்டது.
நான்காவதாக ஜேம்ஸ் ஜக்சன்- ஜெரிக் துசாந் இணைந்து, மிகவும் அவதானமாக விளையாடி 16.2 ஓவரில் 57 ஓட்டங்களைப் பெற்றனர். ஜெரிக் துசாந் 35, ஜேம்ஸ் ஜக்சன 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக